கல்விக்கும் பொருளாதாரத்திற்குமிடையே நிலவும் தொடர்பு

 

கல்விக்கும் பொருளாதாரத்திற்குமிடையே நிலவும் தொடர்பு

அறிமுகம் 

கல்வி என்பது குழந்தைகளை உடல் மற்றும் மனவளர்ச்சியில் அறிவு மற்றும் நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பாகும். கல்வியாளர்கள் கூற்றின் படி இளைய தலைமுறையை முறையாக வழிநடத்துவதிலும் சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனமாகும். அறிவுஇ திறமை போன்றவற்றையும் தந்து ஒரு புதிய சமூகத்தை உருவாக்கி பண்பாடு நடத்தை போன்றவற்றையும் தந்து மனிதனை ஒரு முழுமையான ஆற்றல் உள்ள மனிதனாக மாற்றமடையச் செய்கிறது. இது சமுதாய நுட்பத்தகைமை ஏற்படுவதையும் கல்வி கற்றலையும் கற்பித்தலையும் குறிக்கும். இது திறன்கள்இ தொழில்கள்இ உயர்தொழிகள் என்பவற்றோடு மனம்இ நெறிமுறைஇ அழகியல் என்பவை சார்ந்த வளர்ச்சியையும் சமுதாய வளர்ச்சியில் பங்குபெறச்செய்யும் அமைப்பாகும். கல்வி ஒரு மனிதனின் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வருகிறது.

மனித வாழ்க்கையில் உயர்வான எண்ணங்களும் உன்னதமான குணங்களும் எம்முள் தோன்ற வேண்டுமாயின் கல்வி என்பது அவசியம். வாழ்க்கை என்ற வீட்டில் கல்வி என்ற விளக்கு ஏற்றப்பட்டால் தான் எமது வாழ்வானது பிரகாசிக்கும். இதுவே பிற விலங்குகளிடமிருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டுகிறது. இதனையே திருவள்ளுவர் 

பின்வருமாறு கூறுகிறார். “விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனையவர்’’ கல்வி தான் ஒரு மனிதனது அறிவு கண்களை திறக்கின்றது. பகுத்தறிவை உருவாக்கி அவனை வழிநடாத்துகின்றது. உலகை மாற்றக்கூடிய சக்தி வாய்ந்த ஆயுதம் என்று முழங்கியவர் நெல்சன் மண்டேலா ஆவர்  எனவே கல்வி மிக அவசியமாகும்.  


பொருளாதாரம் என்பது பொருட்களின் உற்பத்தி அதன் விற்பனை மற்றும் அதன் பயன்பாட்டையும் நிர்ணயிப்பது பொருளாதாரம் எனப்படும். ஒரு நாட்டின் உற்பத்தி அதன் விற்பனை மற்றும் பயன்பாட்டையும் வைத்து அந்த நாட்டின் பொருளாதாரத்தை சுலபமாக நிர்ணயித்துவிடலாம். ஒரு நாடு அபிவிருத்தியயை வேண்டுமாயின் அந்நாட்டில் அரசியல்இ பொருளாதார்இ சமூக ரீதியான விருத்தி ஏற்பட வேண்டும். அந்த வகையில் பொருளாதார அபிவிருத்தியில் செல்வாக்குச் செலுத்தும் பிரதான காரணியாக கல்வி விளங்குகின்றது. கல்வி செயற்பாடுகளின் ஒழுங்கமைப்பில் தான் ஒரு நாட்டின் அபிவிருத்தி தங்கியுள்ளது. 

கல்வியின் மூலம் நாட்டின் பல்வேறு பொருளாதார சமூக அரசியல் பிரச்சினைகளை தீர்க்க முடியும். 


கலாச்சார மூலதனம் என்பது அறிவுஇ நடத்தைஇ திறமை ஆகியவற்றின் குவியலாகும். நாட்டில் நிலவும் கல்வி முறைமையினால் எதிர்பார்க்கப்படும் முக்கியமானதொரு கருமம் கலாச்சாரஇ பாரம்பரிய திறன்களை இளஞ்சந்ததியினருக்குப் பெற்றுக் கொடுப்பதாகும். வளந்தோர் சந்ததியிடம் காணப்படும் அறநெறிகள்இ விழுமியங்கள்இ பழக்க வழக்கங்கள்இ பாரம்பரியங்கள் போன்றவற்றை முற்றுமுழுதாக பெற்றுக்கொடுப்பின் எமது வளர்ந்தோர்கள் கொண்டிருந்தவை அனைத்தும் உரியவராகவே எமக்கு கிடைத்திருத்தல் வேண்டும். எனினும் அக்கலாச்சார பண்புகளை ஒப்படைக்கையில் கல்வியின் மூலமாக அவை ஒரு குறித்த அளவுக்கு மெருகூட்டப்பட்டு அபிவிருத்தி செய்யப்படுகின்றது. அவ்வாறாயின் சமூக மாற்றங்களுக்கு அமையக்கல்வி இயைபாக்கமடைவதோடு சமூக மாற்றங்களை ஏற்படுத்துகையில் கல்வியானது முக்கிய பங்கேற்றுக் கருமமாற்ற வேண்டிய நிலையும் ஏற்படுகின்றமை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டியதொன்றாகும். 

கல்வியும் அபிவிருத்தியும் என்னும் விடயம் பற்றிய சிந்தனையில் பொதுவாக வலியுருத்தப்படுவது பொருளாதார அபிவிருத்தியாகும். எனவே கல்வியினால் சமூக பொருளாதார மற்றும் கலாச்சார மூலதனம் பேண்தகு அபிவிருத்திக்கு உதவுகிறது. 

கல்விக்கும் பொருளாதாரத்திற்குமிடையே நிலவும் தொடர்பு

கல்வியும் பொருளாதாரமும் நெருங்கிய தொடர்புடையன. ஆரம்பகாலத்திலருந்து ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்நாட்டின் கல்வி, அமைப்பு, அடக்கம் மற்றும் முறைகள் போன்றன கூடிய செல்வாக்கு செலுத்துகி;ன்றது. விசேடமாகக் கைத்தொழிற் புரட்சியின் பின்புதான் கடந்த மூன்று தசாப்தங்களாக  கல்வி ஒரு சமூக சேவைச்சாதனமாக மட்டுமல்லாமல் அது தேசிய பொருளாதார அபிவிருத்தியின் ஒரு முக்கிய சாதனமென்று பொருளியல் அறிஞர்கள் கொள்கின்றனர். அதுமட்டுமல்லாமல் கல்வியலாளர்களும்  இக்கருத்தினை ஏற்கின்றனர். இதன் விளைவாகவே தற்போது பொருளியல் கல்வித் துறையில் அதிக கவனத்தை ஈர்க்கின்றது எனலாம். இதனால் சர்வதேச நிறுவனங்கள், தேசிய நிறுவனங்கள்,  பிரதேச நிறுவனங்கள், ஆகியன கல்வித் திட்டம் அமைப்பதற்கு முதன்மைப் பெற்று விளங்குவதைக் அவதானிக்கின்றோம். அண்மைக்காலத்தில் கல்வி பொருளியல் என்பதில் ஊக்கம் அதிகரிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. 

முதலாவதாக, ஒவ்வொரு நாட்டிற்கும் கல்விக்கெனச்செலவாகும் பணம் அதிகரிக்கின்றது. முன்னர் ஒரு நாட்டின் மொத்தப் பொருள் உற்பத்தியில் ஒரு வீதம் தொடக்கம் இரண்டு வீதம் வரை பெற்ற கல்வித்துறை இன்று நாடுகளின் அபிவிருத்திக்கு ஏற்ப 4மூ தொடக்கம்  12மூ  க்குமேலும் செலவிடப்படுகின்றது. தனது மொத்த தேசிய வருவாயிற் கூடியளவு பணத்தைச் செலவிடுவதிற் சோவியற் பொதுவுடைமைக் குடியரசும் யப்பானும் சிறப்பிடம் பெறுகின்றன.

இரண்டாவதாக, மக்களிடையே கல்வி வாய்ப்புக்களின் தேவைகள் இன்று அதிகரித்துள்ளன. மக்களாட்சியிலும் சமத்துவ நோக்கிலும் மக்கள் கொண்டுள்ள நாட்டம் கல்வியில் ஏற்படும் நுட்பமாகப் பிரதி பலிக்கின்றது. கல்வியுணர்வு மக்களிடத்திற் பெருமளவுக்கு எழுகின்றது. நாட்டின் பூர்வீகக் குடிகள், பெண்கள், வருமானம் குறைவான மக்கள் என்போரிடையே கல்வி நாட்டம் மிகுந்துள்ளது. 

அடுத்ததாகப் பொருளாதார விருத்தியினாற்றோன்றும் பிரச்சினைகள் பற்றிப் பொருளியல் அறிஞர்கள் கூடிய சிரத்தை காட்டுகின்றனர். வேலையின்மைப் பிரச்சினை, வேண்டிய தொழிற்பயிற்சி கிடையாமை, முன்னேற்றத்தினால் மக்களின் மனப்பான்மையில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை பொருளியல் அறிஞர்களின் கவனத்தை மேன்மேலும் வேண்டுகின்றன. ஒரு நாட்டின் பொருளாதார விருத்தியையும், அவ்விருத்தியின் வேகத்தையும் கல்வி முறையும் அதன் வளர்ச்சியும் பெருமளவு நிர்ணயிக்கின்றன. அதேபோற், பொருளாதார விருத்தியும் கல்வித் துறையிலிருந்து பெருமளவுக்குப் பல விடயங்களைக் கோருகின்றன. மக்களின் வாழ்க்கைத் தரம் உயர உயர, வாழ்க்கைப் பொருள்கள் கணிசமான அளவு தேவைப்படுகின்றன. இவற்றை உற்பத்தி செய்யும் துறைகளிற் கல்வியறிவும் கைத்திறனும் பொருந்திய பலவகைத் தொழிலாளர்கள்; போன்றவர்களைக் கல்வி உலகமே அளிக்கவேண்டியுள்ளது. எனவே ஒரு நாட்டின் பொருளாதாரம் கல்வியைப் பாதிக்கின்றது. (சந்திரசேகரம்,2011  பக்கம் - 123-124)

ஒரு நாட்டின் பொருளாதார வளங்கள் அந்நாட்டின் கல்வியின் மீது செல்வாக்கு செலுத்தும்  மற்றுமொரு சிறந்த காரணியாகும். ஒரு நாட்டின்  கல்வி முறைகளின் அபிவிருத்தியில் பொருளாதாரம் அதிமுக்கிய காரணியாகும். தேசிய வருமானத்தில் கல்விக்காக செலவழிக்கும் பணத்தின் வீதம் மத்திய அரசாங்கத்திற்கும் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்குமிடையே, பங்கீடு செய்யப்படுகின்றன. எனினும் செலவுவகைகள், யாவும் அரசாங்கத்தின் தேசியக்கல்வியின் அமைப்பிலும் மற்றும் தரத்திலும் பிரதிபலிக்கின்றன. கட்டாயக்கல்வி, இலவசக்கல்வி, வாழ்நாள் நீடித்தகல்வி மற்றும் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை கல்விச் சாதனங்கள், ஆசிரியர்கள் போன்ற வற்றுக்கு செலவழிக்கும் பணம் அந்நாட்டின் பொருளாதார வளங்களைப் பொறுத்தனவாயிருக்கும். மேலும் அபிவிருத்தியடைந்த நாடுகளில் இலவசக்கல்வி, கட்டாயக்கல்வி, கல்விநிலையங்கள், அதிகமான மாணவர்கள் உயர் கல்விபெற்றுக்கொள்ளல், ஆராய்ச்சிதுறைகளில் ஈடுபடல் போன்ற சிறப்பு பண்புகளைக் காணலாம். மேலும் 16 வயது வரை கட்டாயக்கல்வி கல்வி வழங்கும் நாடுகளில் எமது நாடும் உள்ளடங்குகிறது. எமது நாட்டில் அரசாங்கம் கல்விக்காக ஒதுக்கப்படும் பணஉதவி ஏனைய நாடுகள் ஒதுக்கப்படும் பணஉதவிகளை விடக்குறைவாகவே வழங்கும் நிலையில்  உள்ளது. (இணைப்பு – 01) கல்வியை அபிவிருத்தி செய்வதில் ஒருநாட்டின் ஊக்கமும் உதவியாக உள்ளது. 

உதாரணமாக கூறப்போனால்  மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது வளம்மிக்க நாடாகயிருந்தும் 1943ஆம் ஆண்டின் பின்னர் இலங்கையிற் கல்விக்கு முதன்மை கொடுக்கப்பட்ட காரணத்தால் இந்தநாடு கல்வி முன்னேற்றம் கண்டது. எனவே பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்களாலும்   கல்வி பாதிக்கப்படும் என்பதை நாம் உணர்தல் வேண்டும். அத்துடன் ஒரு நாட்டின் பொருளாதாரம் அபிவிருத்தியடையும்போது நிலைய மாற்றம் ஏற்படுவதையும் நாம் காணலாம். உதாரணமாக கூறப்போனால் நகர்ப்புறக் கைத்தொழில்கள் மற்றும்  கிராமப்புறக் கைத்தொழில்கள் சமநிலையில் மாறுபடுகின்றன. இதனால் புதிய கைத்தொழில்கள் தோன்றுகின்றன. இம்மாற்றங்களுக்கு அமைய மக்களின் வசிப்பிடம், மற்றும்  தொழிற்சந்தை ஆகியவற்றின் தொடர்பான மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவை கல்வித் தேவை வசதிகள் என்பவற்றில் மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.

18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தொழிற்புரட்சி நிலவியது. கைத்தொழில் வளர்ச்சியுடன் நிலம் மட்டுமே வருவாயில் பிரதான மூலம் என்ற கருத்து மாறுபட்டது. முன்னர் நடைமுறையிலிருந்த வீட்டுக்கைத்தொழில் முறையின் இடம் பெருமளவுக்குத் தொழிற்சாலை அமைப்பு முறையினால் கைக்கொள்ளப்பட்டது. இத்துடன் தொழிற்பிரிவு சிறக்கும் இயல்பு போன்ற புதிய அம்சங்கள் தோன்றின. நகர்புறங்களில்  தொழிற்சாலைகள் விவசாய மக்களைக் கவர்ந்தன. இதனால் விவசாயிகள் வகுப்பும் தொழிலாளர் வகுப்பும் ஒன்றிக்கும் நிலையும் உருவாகியுள்ளது. இதன் பின்னர் இடைநிலைக்கல்வி தொழிற்பயிற்சி, தொழில்நுட்ப நிறுதகைய புதிய வர்க்கத்தினர், ஆரம்பக்கல்வியை வேண்டி நின்றார்கள்

அத்துடன் 20ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களும் கல்வித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தின. ஏனெனில்  மின்சக்தி, போக்குவரத்துச் சாதனங்கள், யந்திர சாதனங்கள், கணக்கிடும் கருவிகள், தானாக இயங்கும் இயந்திரங்கள், நாளாந்த வாழ்க்கையில் விஞ்ஞானத்தின் உபயோகம் போன்ற அம்சங்கள் பொறிமுறையிற் புரட்சியையே கொண்டுவந்துள்ளன. தொழிலாளமக்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து கல்வி கற்க வேண்டிய தேவை ஏற்பட்டது.  இது இந்நூற்றாண்டின் சிறப்பம்சமாகும்.

தற்காலத் தொழிச்சாலைகளில் வேலை செய்யும் மக்களுக்கு ஆரம்பக் கல்வியறிவு மட்டும் போதுமானதல்ல. வேறுபட்ட திறமைகள் இன்று இவர்களுக்குத் தேவைப்படுகின்றன. உற்பத்தித்தொழில், வர்த்தகம், விவசாயம், நீர்ப்பாசனம் ஆகிய துறைகளிற் பலவிதத்திறமைகள் இடம்பெறுகின்றன. இவற்றினைத் தொழிலாளமக்கள் பெற வேண்டுமென்றால்  பலசெயன்முறைத் திறன்களும் பொருந்திய மக்கள்  தேவைப்படு கின்றது. இத்தகைய பல்வகைத் திறனுக்கும் ஏற்ப மக்கள் ஆயத்தம் செய்யக் கல்வி அறிவும் பயிற்சியும் ஒன்றிணைக்க இதற்கு இடைநிலைக் கல்வியும் உயர்நிலைக் கல்வியும் அவசியமாகிறது. 

அத்துடன் தற்காலத்தில் கைத்தொழில் , மருத்துவ, பொறியியல் செயல்முறைகளும் விஞ்ஞான அறிவுடன்கூடிய செயன்முறைத் தொழிலாளர்களும் கூடியயளவில் தேவைப்படுகின்றனர். இதனால் எல்லாத் துறைகளிலும் ஆராய்ச்சித்திறன் தேவை ஏற்படுகின்றது. எனவே இத்திட்டங்களை நடைமுறைப்படுத்த சரியான நிர்வாகிகளும் மேலும் ஒவ்வொருவரின்  தொழில்களுக்கேற்பப் பல்வேறு வகைப்பட்ட பயிற்சியும் கல்வியறிவும் பெறுதல் வேண்டும். பொறிமுறையின் காரணமாகப் பொருளாதார விருத்தியும், விஞ்ஞான மாற்றங்களும் உலகில் நிரம்பியுள்ளன. இதனாற் கல்வி பொதுவாக ஆழமாயும், பலதரப்பட்ட பயிற்சிகள் கொண்டதாயும் அமைதல் வேண்டும். அத்துடன் விஞ்ஞானத் தொழில்நுட்பச் சார்புடைய உயர் பண்பாடு கொண்ட மக்களைத் தோற்றுவிக்கும் தன்மையுடையதாய்க் கல்வி அமைய வேண்டும். (சந்திரசேகரம்,2011 பக்கம்- 126) 

வேலையில்லாப் பிரச்சினைக்கு இது சிறந்த தீர்வாக அமையலாம் என அறிஞர்கள் கூறுகின்றனர். அத்துடன் மாற்றமடைந்துவருகின்ற சமுதாயத்தில் அதற்கேற்றவாறு  மனப்பாங்குகளையும் வளர்க்கத்தக்க கல்விநெறி மிகவும் முக்கியமானதாகவும் அமைகின்றது. உலகம் யந்திரமயமாக்கப்பட்டதன் விளைவாக தற்போது தொழில்வளர்ச்சி துரிதமாக நடைபெறுகின்றது. எனவேதான் விசேடமாக மேற்கத்திய நாடுகளில் தொழிலாளமக்கள் தொழிற்றுறைகளில் செலவிடப்படவேண்டிய நேரம் குறைகின்றது. அதாவது அவர்களின் ஓய்வு நேரம் மேலும்  அதிகரிக்கின்றது. இது நாட்டின் விருத்திக்கும் தனிமனிதனின் முழுமைக்கும் ஓய்வுநேரம் பயனுடையதாக இருத்தல்வேண்டும். இது கல்வி வளர்வதற்கும் சிறந்த வழியாகும். இதனால் மாணவர்களின் ஆக்கச்செயற்பாடுகள் விருத்தியடைந்து ஆளுமைப் பண்புகள் வளர்க்கப்படுகின்றது.  

பொருளாதார நடவடிக்கைகளிற் பிரவேசிக்கும் வயது வந்தவர்கள் தங்களைத் தகுந்தமுறையில் நெறிப்படுத்தவும், தொழிற்றுறைக்கு ஆயத்தமாக்கவும், கல்வியறிவை விருத்தி செய்யவும், தொழிற்றிறமைகளைப் பெருக்கவும், பொதுவாகத் தம்வாழ்வை வளம்பெறச் செய்யவும் முதிர்ந்தோர் கல்வித்திட்டம் கூடிய முக்கியத்துவம் பெறுகின்றது. நாட்டுக்குநாடு இதற்கு ஒதுக்கப்படும் பணம்வேறுபடுகின்றது. நமது நாட்டில் 0.5மூ மே முதியோர் கல்விக்கு ஒதுக்கப்படுகின்றது. டென்மார்க், நோர்வே போன்ற நாடுகளில் 30மூ ஒதுக்கப்படுகின்றது என்பதை நாம் அறிய வேண்டும். சமுதாயம், பள்ளிகள், நூல் நிலையங்கள், தொழில்நுட்பப்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்பு இதன் விருத்திக்குப் பெருமளவில் வேண்டியுள்ளது. சிறுவர்களின் கட்டாயக்கல்வி, வயது வந்தவர்களின் கல்வியிலேயே தங்கியிருக்கும். கல்வியைப் பற்றிய எண்ணக்கருத்துக்கள் காலப்போக்கில் மாற்றமடைகின்றன. ஆரம்பத்தில் கல்விஊட்டுவது சலுகை எனக் கொள்ளப்பட்டது. அறியாமையை நீக்குவது உன்னத செயலாகக் கொள்ளப்பட்டது. முற்காலத்தில் அறியாமையை ஒருவகையான இல்லாமை எனக்கொண்டனர். பின்னர் கல்வியைப் பரப்புவது ஒரு சமூகசேவை என்ற எண்ணக்கரு நிலவியது. கல்வியானது, ஒருவனுக்குத் தன்னைப் பற்றியும், தனதுசூழல் பற்றியும் அறியும் அறிவைக் கொடுக்கின்றது. (சந்திரசேகரம்,2011 பக்கம்- 128) 

தற்போது சமூகங்களில் பெருமளவு பரவும் நோய்களால் (கொரோனா , காசநோய் மற்றும்  டெங்கு)  இயற்கை ஆபத்துக்கள் மற்றும் உணவுப் பற்றாக்குறை போன்றவற்றால் மக்கள் சிரமப்படுகின்றன. எனவே கல்வியறிவைக் கொடுப்பதால் மக்களின் வாழ்க்கையினை சீராக்கப்படலாம் என்ற நம்பிக்கை தற்போது ஏற்பட்டுள்ளது.   எனவே தற்போது சமூகநலன் அமைப்புகள் மற்றும்  அரச நிறுவனங்கள் கல்வியை அடிப்படையாக கொண்டு மக்களுக்கு உடல்நலன் மற்றும் பொருளாதார நிறைவு ஆகியவற்றைக்குறித்து மக்களுக்கு ஊக்கமளிக்கிறது.  “ கல்வி மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்று, எனும் கருத்து வேரூன்றி வளருகின்றது. ஒவ்வொரு மகனும் கல்வியறிவு பெறுவதற்கு உரிமையுடையவனாயுள்ளான்” ஆரம்ப அடிப்படை நிலையில் அவனுக்குக் கல்வி இலவசமாக வழங்கப்படல் வேண்டுமென ஐக்கியநாடுகளின் மனித உரிமைகள் சாசனத்தின் 26ம் உறுப்பு உறுதிப்படுத்துகின்றது. (ஜெயராசாஇ2016 பக்கம் - 27)

ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றை மக்களுக்கு நிறைவேற்றுவதில் எந்த அரசாங்கத்துக்கம் கடமைப்பாடுள்ளது. எனவே ஒவ்வொரு மனிதன் இவ்வுலகில்  வாழ்வதற்கு கல்வி அறிவு இன்றியமையாதது. ஒவ்வொரு நாடும் கல்விக்காக  நாளுக்குநாள் அதிகப்பணத்தைச் செலவிடுகின்றது. மக்கள்பெறும் கல்வியின்தரம் வாழ்க்கைத் தரத்தை நேரடியாக செல்வாக்கு செலுத்துகிறது.  கல்வியிற்காக செலவிடுகின்ற பணம் மனித வளங்களிற் செலுத்தும் சிறந்த மூதலீடாகும். மக்கள் ஒருநாட்டின் விலைமதிப்பற்ற செல்வமாகும். எனவே கல்வியறிவும் பயிற்சியும் பெற்ற மக்களை விருத்தி செய்வதால் மிகச்சிறந்த முதலீட்டைப்பெறலாம். இம்முதலீடு உடனடியாகப் பயன்கொடுக்காது எனினும் இது நீண்டகால முதலீட்டாக  கணிக்கப்படுகின்றது. எனவே கல்வியீட்டும் வருமானத்தை கணக்கிட்டு அறிவது சுலபமல்ல, அதுவே கல்வியின் சிறப்பம்சமாகும். எனவேதான் மனிதவளங்களில் முதலீடு செய்வதற்கு  ஆக்கமுயற்சிகளிற்கூடிய கல்வியறிவுடைய, பயிற்சி பெற்றவர்களை நிபுணர்களை பயன்படுத்துவதனால் உச்ச பயன்களைப் பெறலாம். 

மேலும் தற்போது நவீன உலகில் இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால்     கல்வியில் புதிய கண்டுபிடிப்புக்களையும் மற்றும் புதிய சீர்திருத்தங்களையும் மக்களுக்கு வழங்குதல் அவசியமாகும். எனவே மக்கள் புதிய திறன்களையும்  திறமைகளையும்  பெறுவதால் சிறந்த மனித மூலதனம் உண்டாக்கப்படுகின்றது. இதனால் கல்வி பல திறமைகளை வளர்ப்பது மட்டுமல்ல அவற்றைக் கண்டுபிடிக்கவும் உதவுகின்றது. மேலும் கல்வி ஆக்கச்செயற்பாடுகளுக்கு கூடியயளவு பயன்படுகிறது.  இயற்கைவளங்களில் ஒன்றான மனித வளத்தை மற்ற உற்பத்திக் காரணிகளுடன் கூடிய இலாபம் பெறக்கூடிய அளவுக்குக் கல்வியே ஒன்று சேர்க்கின்றது. 

  உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியிலும் தொழில் பயிற்சிகளை வழங்குவதன் மூலம் சிறந்த ஆற்றல்மிக்க தொழில் தேர்ச்சி பெற்ற மக்கள்சமூகத்தை உருவாக்கலாம். கல்வியறிவுடைய மக்களின் உற்பத்தியில் ஆற்றல் அதிகரித்தால்  நாட்டின் வருமானம் அதிகரிக்கின்றது. இதனால் கல்வி தொழில்வாய்ப்புக்கும் வழிவகுக்கின்றது. மேலும் அபிவிருத்தியடைந்த  நாடுகள் யாவற்றிலும் அதிகமாக கைத்தொழில், போக்குவரத்து, பொதுமக்களுக்குப் பயன்படும் சேவைகள் ஆகியவற்றிலும் பார்க்கக் கல்வித்துறையிலேயே அதிக மக்கள் தொழில்புரிகின்றார்கள். 

அத்துடன் கல்வி மறைமுகமாகக் பல நன்மைகளைக் கொடுக்கின்றன. மாணவர்களின் சமூகமயமாக்கலினால் கலாச்சார விழுமியங்களை மதித்தல் மற்றும் பிறகலாச்சாரங்களுக்கு மதிப்பளித்தல் போன்ற உயர்பண்புகளையும் நடத்தை முறைகளையும் கற்கின்றார்கள். இச்செயற்பாடுகளுக்கு கல்வி உதவிபுரிகின்றது. இதனாற் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான சமூக ஒருமைப்பாடும் உருவாகின்றன. பொருளாதாரவிருத்தி நிலம், மூலதனம், மக்களின் கடமைகள், முயற்சியாளரின் ஆற்றல் போன்ற ஆக்கக் காரணிகளிற் தங்கியுள்ளது. ஆனால் இவற்றின் திறமைகளைக் கல்வியின் மூலமே  வளர்க்க வேண்டும். இதிற் கைத்தொழில் அபிவிருத்தியடைந்த நாடுகள் அதிக ஆர்வம் கொண்டுள்ளதனால் அங்கே கைத்தொழில் மேம்பாடு உண்டாகின்றது. எனவே பொருளாதாரத்தை உருவாக்குவதிற் அடிப்படை காரணி கல்வியாகும்.

இன்று உலகிற் பொருளாதாரவிருத்தி மக்களிடத்திலுள்ள திறன்களை வளர்த்தல், கைத்தொழில், விவசாயம், வர்த்தகம் ஆகிய துறைகளிற்  ஆகியவற்றிற் தங்கியுள்ளது. இன்று உலகிலுள்ள ஒவ்வொருநாட்டின் அரசாங்கமும் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யக் கடமைப்பட்டுள்ளது. எனினும் பொருளாதார அபிவிருத்திக்குப் பல அம்சங்கள் தேவைப்படுகின்றன. 

முதலாவது மிகவும் திறமைவாய்ந்த அதிகமான மக்கள், தொழிலாளர் தொகுதி பரந்த அளவில் வேறுபாடுடைய திறமைகளால் ஆக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் கொண்டுள்ள அதிகரிக்கும் திறமைகள் பாடசாலைகளிலும் உயர்நிலைக் கல்லூரிகளிலும் பெறும் திட்டமிடப்பட்ட கல்வியின் மூலம் பெறப்படுகின்றன. மக்களுடைய வாழ்வின் சுபிட்சத்துக்கு பொருளாதார விருத்தி கல்வியில் தங்கியுள்ளது, என்பதற்கு வரலாறு சான்றுபகரும் சோவியற் குடியரசு, இஸ்ரவேல், ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளை நாம் உதாரணமாகக் கொள்ளலாம். 

19ஆம் நூற்றாண்டினை எடுத்துக்கொண்டால் கைத்தொழிற் புரட்சிமூலம் பொருளாதாரத் தொழில்நுட்ப மாற்றங்களைக் கொண்டு கல்வி அபிவிருத்தியை இந்நாடுகள் அடைந்தன. சோவியற் குடியரசு பொருளாதார விருத்திக் கல்வியை நேரடிக் கருவியாகக் கொண்டது. இங்கு பொருளாதாரமும் கல்வியும் இணையும் தன்மையை நாம் அறியலாம்.   1918 ஒக்டோபர் புரட்சியின் முன் அந்நாடுகள் இருந்த நிலையையும் பின்னர் வளர்ந்த நிலையையும் ஒப்பிடுவதன் மூலம் நாம் இவ்வுண்மையை அறியலாம்.  அத்துடன் தாழ் நிலையிலிருந்த சோவியற் குடியரசு வியக்கத்தக்க பொருளாதார மேம்பாட்டை ஐம்பது வருடங்களுள் அடைந்தமை ஒரு மாபெருஞ்சாதனையாகும்.  இங்கு தேசியப் பொருளாதாரத் திட்டங்கள் தொழில்நுட்ப அடிப்படையிலேயே எழுந்தன. தேசியக் கல்வி ஆழ்ந்தும் விரிந்தும் வீறுகொண்டு எழுந்தது. எழுத்தறிவின்மையப் இல்லாமலாக்க  இந்நாடுகள் அளவற்ற முயற்சி எடுத்தது. கல்வி உரிமை இங்கு எல்லோருக்கும் அளிக்கப்பட்டுள்ளது.  1930இல் சிறுவர்கள் எல்லோரும் கட்டாயமாகக் கல்வி பெறவேண்டுமெனும் சட்டம் உருவாக்கப்பட்டது. 1932இல் எட்டு வயது தொடக்கம் பதினொரு வயது நிரம்பிய சிறுவர்கள் எல்லோரும் பாடசாலைக்குச் சென்றனர். 1934இல் 80மூ ருசிய மக்கள் தாய்மொழியை எழுதவும், வாசிக்கவும் ஆற்றல் பெற்றனர். பத்தாண்டுக் கட்டாய இலவசக்கல்வி இங்கு வழங்கப்படுகின்றது. இடைநிலைப் பள்ளிக்கூடங்களில் நுண்ணறிவு, உடல்நெறி, அறநெறி, தொழில்நுட்ப அறிவு, ஆகியன கற்பிக்கப்படுகின்றன. கூட்டுடைமை வாதம், சர்வதேசியம் ஆகிய பண்புகள் போதிக்கப்படுகின்றன. மாணவர்கள் பதினைந்து வயதிலிருந்தே வேலைச் சார்புடைய கல்வியைப் பெறுகின்றனர். பயிற்சியுடன் கூடிய கல்வி பொறியியற் பண்பில் எழுந்த பொருளாதார வளர்ச்சியாகும்.  ஐம்பது வருடங்களுள் சமூக உடைமை வாதத்தின்கீழ்த் திட்டமிடப்பட்ட, சமூகம், கலாசாரப் புரட்சி மூலம் சோவியற் குடியரசு போதனையும் சாதனையும் வழங்கியுள்ளது, என நாம் சுருக்கமாகக் கூறலாம்.  (சந்திரசேகரம்,2011 பக்கம் - 131 )

மக்களின் ஆற்றலையறிந்து பயிற்சியளித்துப் பண்படுத்தி, நாட்டினை வளம்படுத்த வைப்பதே அந்நாட்டுக் கல்விமுறையின் நோக்கமாக இருக்க வேண்டும். அதனடிப்படையில் தேசியப் பொருளியலின் திட்டமிடப்பட்ட ஒழுங்கு பொருள்வளம் மட்டுமல்லாமல் பலவித வளங்களையுமே திட்டமிட்டுப் பயன்படுத்தல் மற்றும் பல்துறைப் பயிற்சிமுறை, அரசினால் ஒழுங்குபடுத்தப்பட்ட கல்விமுறை முதலியன வியக்கத்தக்க பொருளாதார விருத்தியைக் கொண்டுவரும். எனவே ஒரு நாட்டின் கல்விமுறை அந்நாட்டின் பொருளாதார விருத்திக்கு உறுதுணையாய் இருத்தல் வேண்டும். எனவேதான் கல்விக்கும் பொருளாதாரத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை உறுதிப்படுத்தலாம். 


No comments

Powered by Blogger.