கள ஆய்வு அறிமுகம்
கள ஆய்வு அறிமுகம்
வகுப்பறைக்கு வெளியே மாணவர்களை அழைத்துச்சென்று கற்றல் கற்பித்தலில் ஈடுபடுத்தல் வெளிக்கள ஆய்வு எனப்படும்.
nளிக்கள ஆய்வின் நன்மைகள்
1. களக் கற்கை பாடவிடயங்களை உயிர்ப்புள்ளதாகவும் கருத்துச் செறிந்ததாகவும் மாற்றியமைக்கும்.
2. இதனூடாக மாணவர்களின் கண்டறிதல் திறன் வளர்க்கப்படுகின்றது.
3. களக்கற்கையானது தனியே ஒரு புலனங்கத்துக்குரிய செயற்பாடாக எல்லைப் படுத்தப்படாது சகல புலனங்கங்களும் இயைந்கும்து செயற்படக்கூடிய ஒரு செயற்பாடாகும்.
4. மாணவர் - ஆசிரியரிடையே இ மாணவர் - மாணவரிடையே ஜனநாயகத் தன்மை யும் ஒத்துழைப்பும் வளர்க்கப்படுகின்றது.
பாடசாலைக் கல்விச் சுற்றுலாக்களை ஏற்பாடு செய்தல்
1. பாடசாலை பிள்ளைகளின் அறிவு இ மனப்பாங்கு மற்றும் திறன் என்பவற்றை விருத்தி செய்யும் நோக்கில் பாடசாலைக் கலைத்திட்டத்திற்கு இணைந்ததாக கலைத் திட்டத்திற்குத் தேவையான முக்கியமான இடங்களை பிள்ளைகளுக்குக் காட்டுவதற் காக கல்விச் சுற்றுலாக்கள் ஒழுங்கு செய்யப்படுகின்றன.
2. கல்விச் சுற்றுலாக்களை பாடசாலையின் வருடாந்த திட்டத்தில் உள்ளடக்கவேண்டிய தோடு 14 நாட்களுக்கு முன் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு உரிய ஆவணங் களை சமர்பித்து முன் அனுமதியை பெற்றுக்கொள்ளல் வேண்டும்.
3. கல்வி சுற்றுலாக்களை திட்டமிடம்போது வருடாந்த வரவு செலவு திட்டத்தில் உள்ள டக்கப்பட வேண்டியதோடு பாடசாலை அபிவிருத்திக் கணக்கினூடாக நிதிப்பிரமானங் களுக்கு உட்பட்டு செலவுகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.
4. கல்வி களச்சுற்றுலாக்களின் போது கல்விச் சுற்றுலாக்களுக்கு மேலதிகமாக மேல் குறிப்பிட்ட அனைத்து ஆவணங்களையும் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
5. கல்வி களச் சுற்றுலாக்களின் போது தேவை இ பாட அலகுகள் மற்றும் இணைக் கலைத்திட்ட செயற்பாடுகளுடன் காணப்படும் தொடர்பு என்பன தெளிவுபடுத்தி காட்டப்படவேண்டும்.
6. கல்வி சுற்றுலா ஒன்றை நிறைவுசெய்ததன் பின்னர் ஒட்டுமொத்த அறிக்கையையும் வரவு செலவு அறிக்கையையும் கோட்டக்கல்வி பணிமனைக்கு ஃ வலயக்கல்விப் பணிமனைக்கு சமர்பிக்க வேண்டும்.
சுற்றுலா செல்வதற்காக அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு சமர்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
1. கோரல் கடிதம் ஃ உரிய படிவம்
2. சுற்றுலாவில் பங்கேற்கும் மாணவர்கள் இ பெற்றார் மற்றும் ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியல்.
3. வரவு செலவு மதிப்பீடு
4. பெற்றாரின் விருப்பம் அடங்கிய கடிதங்கள்
5. வாகனத்தின் தகுதி தொடர்பான கடிதங்கள் இ முழுமையான காப்புறுதிச் சான்றிதல் வருமான உத்தரவுப் பத்திரம் இ சாரதி மற்றும் உதவியாளரின் உத்த ரவுப்பத்திரங்கள்.
6. பிரயாண வழி குறிக்கப்பட்ட வரைபடம்
7. நிறுவனங்களை பார்வை இடுவதற்கான அனுமதியைப் பெற்றுக்கொண்ட கடிதங்கள்
8. தங்குமிடங்களுக்காக அனுமதியைப் பெற்றுக்கொண்ட கடிதங்கள்
9. பிரயாணத்திற்கான நேர அட்டவணை.
வகுப்பறையில் செய்யப்படும் முன்னாயத்தங்கள்
• நோக்கத்தைத் தீர்மானித்தல்
• செலவிடும் நேரத்தைத் தீர்மானித்தல்
• செய்ய வேண்டிய செயற்பாடுகளைத் திட்டமிடல்
• பாடசாலை அதிபரிடம் அனுமதி பெறல்
• பெற்றோரின் அனுமதி பெறல்
• வலயக்கல்விப் பணிப்பாளரின் அனுமதி பெறல்
• செல்லும் இடங்களின் இ பார்வை இடும் இடங்களின் அனுமதி பெறல்
• தேவையான பொருட்களை பெறுதல்
• குழுக்களாக்கள்
• குழுத்தலைவர்களின் கடமையைத் தீர்மானித்தல்
• ஆசிரியர் களத்தை ஏற்கனவே சென்று பார்வையிடல்
களத்தில் இயங்குதல்
• ஆசிரியர் பொறுப்பு அதிகம்
• ஆசிரியர் முன்மாதிரியாக இயங்குதல்
• சூழலுக்கு ஏற்ப திட்டங்களை மாற்றுதல்
• தேவையான காரியங்களில் மட்டும் ஈடுபடுத்தல்
• அவதானிக்க வேண்டியவற்றை அவதானிக்கச் செய்தல்
• குழுக்களாக இயங்குதல்
• ஆய்வு நோக்கத்தில் அவதானிக்க வைத்தல்
• தேவையான சேகரிப்புக்களை மட்டும் மேற்கொள்ளுதல்
களவேலை முடிந்த பின்பு வகுப்பில் மேற்கொள்ளவேண்டியவைகள்
• அவதானங்களைக் கலந்துரையாடல்
• பெறுபேறுகளை உருவாக்குதல்
• விமர்சித்தல்
• பாராட்டுதல்
• அறிக்கை சமர்ப்பிப்பு
வெளிக்கள ஆய்வினை மேற்கொள்ளும்போது கவனிக்க வேண்டியவை
• கள ஆய்வு செய்யப்படும் இடத்தை ஆசிரியர் சென்று பார்வையிட்டு அவ்விடம் பொருத்தமானதா என அவதானிக்க வேண்டும்
• அவ்விடம் பாதுகாப்பானதா எனப் பார்த்தல்
• நேக்கம் நிறைவடையக்கூடியதா என அறிதல்
• தேவையான உபகரணங்களை ஒழுங்கமைத்தல்
• மாணவர்களை குழுக்களாக இயங்க ஒழுங்குபடுத்தல்
களப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டதன் நோக்கங்கள்
• குழு முறையில் களப் பயணத்தில் இயங்குவதனூடாக மாணவர்களின் ஆளுமை விருத்தியடையும்
• குழு முறையில் களப் பயணத்தில் இயங்குவதனூடாக மாணவர்களின் தலைமைத்துவ பண்புகள் விருத்தியடையும்.
• மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுக்கற்றல் தொடர்பானதை மாணவர்கள்
முழுப்பயன்களையும் பெற்றுக்கொள்ளல்.
No comments