விழுமியங்கள்

 

விழுமியங்களுக்கான பின்வரும் உதாரணங்களை ஒரு சிறிய சம்பவத்தின் ஊடாக விபரிக்குக. 

1.அன்பு காட்டுதல் 

விழுமிய வெளிப்பாடுகளின் ஒன்றாக அன்பு காணப்படுகின்றது. பாடசாலையில் மாணவர்களின் இயக்கு நிலைக்கும் ஆசிரிய மாணவர் தொடர்பினை வழிப்படுது;கின்ற ஒன்றாகவும் இப்பண்பு விளங்குகின்றது. கற்றல் கற்பித்தல் செயற்பாட்டினை மேற்கொள்வதற்கு முன்னர் ஆசிரியரானவர் மாணவர்களின் உள நிலையை விளங்கிக் கொள்ள வேண்டும.; 

  ‘மஹதி என்ற மாணவி தரம் 1 ஜ சேர்ந்தவள் அவளின் பாடசாலை ஆரம்ப நாட்களில் வகுப்பறையில் நுழைவதற்பயப்படுவாள் அந்த சந்பர்ப்பத்தில் அவளின் வகுப்பாசிரியர் அவளை அன்பாக அரவனைத்து தனக்கு அருகில் அவளை வைத்துக்கொண்டார். சில நாட்கள் சென்றதன் பின்னர் ஆசிரியருக்கு அருகில் இருந்து விலகி சக மாணவர்களுடன் இணைந்து கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டாள’;.ஒரு ஆசிரியரானவர் பிள்ளையை அனுகுகின்ற போது பிள்ளை எதிர்பாக்கும் விதத்தில ; செயற்பாடுகின்ற போது பிள்ளையை அரவனைத்தல், புகழ்தல், பரிசுகளை வழங்குதல் போன்ற செயற்பாடுகளின் ஊடாக அன்பை வெளிப்படுத்தல் வேண்டும். அத்தோடு விசேட தேவையுடைய மாணவர்களை இணங்கண்டு அவர்களுடன் அன்போடு பழகுவதன் ஊடாக கல்வி நடவடிக்கைகளில் இலகுவாக அவர்களை முன்னேற்ற முடியும் 


2.சாந்தமாக நடந்து கொள்ளதல் 

ஒரு ஆசிரியரானவர் மாணவர்னளிடையே சாந்தமானவராகவும், பொறுமையானவராகவும் நடந்து கொள்ள வேண்டும.; மாணவர்கள் எதிர்மறையான தூண்டுதல் செயற்பாடுகளை மேற்கொள்கின்ற போது அதனைக் கட்டுப்படுத்துவதற்காக சாந்தமான முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எதிர்மறையான நடத்தைகளை கட்டுப்படுத்துவதற்கான வெளிவசதிகள், தூண்டுதல்கள், வழிகாட்டல்கள் என்பவற்றை ஏற்படுதத்pக்கொள்ள வேண்டும.; அஸ்ரிப் என்ற மாணவன் எதிர்மறையான நடத்தை கொண்டவனாக இருந்தான் வகுப்பறையில் கெட்ட வார்த்தைகளை அடிக்கடி பேசி வந்தான் இதைக் கண்ட வகுப்பாசிரியர் பல தடவை அவனை கணடித்தார் இருப்பினும் தொடர்ந்து அவனது பழக்கத்தை மாற்ற முடியவில்லை. சில நாட்கள் கடநத்தும் அவன் கெட்டவார்தை பேசுகின்ற போது ஆசிரியர் அவனை கணடிக்கவில்லை பின்னர் அஸ்ரிப் தனது பிழை என்ன என்பதை உணர ஆரம்பித்தான் அதன் பினனர் கெட்டவார்தை பேசுவதை நிறுத்திவிட்டான்’ தேவையற்ற நடவடிக்கைகளை கவனிக்காது விடுவதும் இன்று கையாளக்கூடிய நுட்பமுறையாகும். 


3. இன்சொல் பேசுதல் 

ஆசிரிய மாணவத் தொடர்புகளின் போது இனிய சொற்பாவனையானது மாணவர்களை உளரதீயாக மாற்றத்திற்கு உட்படுத்த கூடிய ஒன்றாகும். ஆந்த வகையில் முடியாது இயலாது என்ற வார்த்தைகளை மாணவர்களின் இயலுமைக்கு முன்னால் பேசக்கூடாது 

  ‘ஆசிக் என்ற மாணவன் கற்றல் செயற்பாடுகளில் பின்தங்கியவனாக இருந்தான் அந்த சந்தர்ப்பத்தில் அவனின் கற்றலில் குறைகளை கூறாது அவனது வகுப்பாசிரியர் உன்னால் முடியும,; நீ கொட்டிக்காரன், நீ முயற்சியாளன் போன்ற வார்த்தைகளைப் பயன்படுததி அவனை உற்சாகப்படுதத்pனார் அதன் பின்னர் அவன் கற்றலில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தான.; இவ்வாறு இன்செற்களை பயன்படுதிதுவதன் மூலமே இயலாமைக்குள் உட்படுகின்ற மாணவரை முன்னேற்ற முடியும.; 

 

4. உண்மை உரைத்தல் 

 ஆசிரியரானவர் எப்போதும் மாணவர்களுக்கு உண்மையை உரைக்க கற்றுக் கொடுக்க வேண்டும். அந்த வகையில் பிள்ளைகளுக்கு ஏதாவது விதியென்றை வழங்கும் போது அதற்கான காரணத்தை விளக்க வேண்டும் என உளவியலாளர்கள் கூறுகின்றனர் 

‘சபானா என்ற மாணவி வகுப்பில் கெட்டக்காரியாக இருந்தாள் இருப்பினும் அவளிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. அவள் மாணவர்களுடன் சேர்ந்து பொய் பேசக் கூடியவளாக இருந்தாள் இதனைக் கண்ட வகுப்பாசிரியர் அந்த மாணவியை அழைத்து உண்மை உரைத்தலின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார் அதன் பின்னர் அம்மாணவி பிழையை உணர்ந்து மன்னிப்பு கேட்டு தன்னை திருத்திக் கொண்டாள். பொய் சொன்னால் , சமூகம் உங்கள் சொற்களை நம்ப மாட்டாது என்ற வகையில் விழுமியப் பண்புகளில் ஒன்றான உண்மை உரைத்தலின் அவசியத்தை கூறி அதற்கான காரணத்தையும் மாணவருக்கு ஆசிரியர் தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு செய்வதினூடாகவே சமூகத்திற்கு உண்மையான பிரஜையை வெளிக் கொண்டுவர முடியும். 

 

5.சமத்துவம் பேணுதல் 

      ஆசிரியரானவர் மாணவர்களுக்கிடையே எந்த சந்தர்ப்பத்திலும் சமத்துவத்தை பேண வேண்டும். மாணவர்களுக்கிடையே பிணக்குகள் ஏற்படும் போது நடுநிலையாக செயற்பட்டு சமத்துவம் பேண வேண்டும். அவ்வாறு ஒரு ஆசிரியர் செயற்படுகின்ற போது மாணவர்களின் எதிர்காலத்தில் அதனை முன்மாதிரியாக கொண்டு செயற்பட தூண்டப்படுவார்கள். பொருளாதாரம், கெட்டித்தனம், திறமை என்ற எதுவித வேறுபாடுகளுமின்றி மாணவர்களை சமத்துவ ரீதியில் நடாத்த வேண்டும் 

 


No comments

Powered by Blogger.