கல்வியுடன் தொடர்புடைய கட்டளை சட்டங்கள் மற்றும் கல்வி வரலாறு


 கல்வியுடன் தொடர்புடைய கட்டளை சட்டங்கள் மற்றும் கல்வி வரலாறு


அமைப்பு :- அமைப்பு என்பது பொதுக் குறிக்கோள்களை முன்வைத்து ஒழுங்கமைக்கப்படும்  ஒரு சமூக வடிவமாகும், வணிக, அரசியல் , தொழில் சமயம்  ஈடுபாடுகள் போன்ற நோக்கங்களை மையமாக் கொண்டு  அமைப்புக்கள் அமைக்கப்படுவதுண்டு  இவ்வமைப்புக்களை இரண்டாக  வகைப்படுத்தலாம் 

1. பொருள் அமைப்பு 

2. மனித பிரிவுகள்   என வகைப்படும்.

இதற்கு எடுத்துக்காட்டாக சமய தலங்கள், நூலகங்கள் , சமூக நிலையங்கள், கட்சிகள், இயக்கங்கள் போன்ற அமைப்புக்கள்.

முகாமைத்துவ பணிகள் அமைப்பு பற்றி பதினாறு  கடமைகளை  சொல்கின்றார் ஹொன்றி பயோல்  அவை.

1. திட்டத்தை சீராக தயாரித்தலும் செயல்படுத்துவதும். 

2. மனித ஆற்றல் மற்றும் மூலப்பொருட்கள் அதிகமான நோக்கங்களின் தோவைக்கேற்ப பயன்படுத்தப்படுகின்றதா என்பதை பார்த்தல்.

3. திறமையான ஒரு வழிகாட்டும் அதிகாரத்தை உருவாக்குதல்.

4. எல்லா செயல்களையும் சேர்த்து ஒருங்கினைத்தல். 

5. முடிவுகளை தெளிவாகவும் துள்ளியமாகவும் விளக்குதல.; 

6. திறமையான தேர்வுக்கு ஏற்பாடு செய்வது, ஒவ்வொரு துறையும் ஒரு திறமையான நபரின் தலைமையில் செயற்பட வைத்தல்.

7. எல்லோருடைய கடமைகளையும் தெளிவாக வரையறுப்பது.

8. பொருப்புகளையும் , முயற்சி எடுப்பதையும் ஊக்குவித்தல்.

9. முறையான பொருத்தமான ஊக்குவிப்புக்களை வழங்குதல்.

10. தவறுகளுக்கும் குறைகளுக்கும் உரிய தண்டனைகளை உருவாக்குதல் 

11. ஒழுங்கு நிலை நாட்டப்படுகின்றதா என்பதை கவனித்தல்.

12. பொது நன்மைக்காக தனியார் நன்மைக்காக விட்டுக் கொடுத்தல்.

13. ஓருமிப்பு ஆணையால் குழுக்கவனம் செலுத்தல்.

14. பொருள் மற்றும் மனித ஆற்றல் முறையைக் கவனித்தல்.

15. எல்லாச் செயல்களும் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறதா என்பதை பார்ப்பது.

16. அளவுக்கு மீறிய ஒழுங்கு முறைகள் விதி முறைகளை தண்டித்து, சிவப்பு நாடா ஆகியவற்றை எதிர்த்து போராடுதல்.

நிர்வாக முகாமைத்துவத்தின் தந்தை ஹென்றி பயோல்  ஒழுங்கமைப்பு கோட்பாட்டின் தத்துவத்தின் மூலம் முகாமைத்துவத்தின் செயற்பாடுகள் ஏழு வகையாகும்.

1. திட்டமிடல். (pடயnniபெ)                                 

2. ஒழுங்கமைத்தல் (ழசபயnளைiபெ)

3. ஊழியரிடல் (ளவயககiபெ )

4. செயற்படுத்தல் (னசைநஉவiபெ)

5. ஒருங்கிணைத்தல் (உழழசனiயெவiபெ)

6. அறிக்கையிடல் (சநிழசவபை)

7. வரவு செலவு திட்டம் தயாரித்தல் (டிரனதநவiபெ)

முகாமையாளர் பற்றி ஹென்றி பயோல் குறிப்பிடுகையில் 

தனது ஊழியர் பற்றி ழுழுமையான அறிவை கொண்டவராக இருத்தல் வேண்டும்.

தகமையற்றவர்களை அகற்றிவிடல் வேண்டும் 

சிறந்த உதாரணங்களை ஏற்படுத்த வேண்டும் 

தனது உதவியாளர்களுடன் 

மகாநாடுகளை நடத்தி அவர்களை ஒன்றினைக்க வேண்டும் 

நேரவிரயம் தவிர்க்கப்படல் வேண்டும்

ஊழியர்களிடையே ஒற்றுமை,முயற்சி,விசுவாசம் என்பன வளர்ச்சி பெறச் செய்ய வேண்டும்.

ஹென்றி பயோல் உருவாக்கிய பதினான்கு கொள்கைகள் 

1. தொழிற் பிரிப்பு :- தொழிற் பிரிப்பு மற்றும் சிறப்புத் தேர்ச்சி மூலம் குறிப்பிட்டளவு உள்ளீட்டின் மூலம் சிறப்பான வெளியீடு பொறப்படலாம்.

2. அதிகாரம் மற்றும் பொறுப்பு  :- அதிகாரம் என்பது கட்டகளை இடுதலுக்கான உரிமை மற்றும் கீழ் படிதலை பெறுவதற்கான வலு ஆகியவற்றை குறிப்பிடும் முகாமையாளர் ஒருவர் தனது பதவியின் மூலம் உத்தியோக பூர்வமான அதிகாரத்தையும் தனது ஆளுமை அறிவு மற்றும் அனுபவத்தின் மூலம் பிரத்தியேக அதிகாரத்தினையும் கொண்டிருக்கின்றார் பொறுப்பு என்பது ஒப்படைக்கப்பட்ட பணிகளை ஊழியர்களைக் கொண்டு செய்விப்பதற்கான கடப்பாடு ஆகும். ஆகவே பொறுப்பு மற்றும் அதிகாரம் ஆகியன ஒன்றுக் கொன்று சமனாக இருத்தல் வேண்டும்.இதன் மூலம் துஷ் பிரயோகம் எழுவதை தவிர்க்கலாம்.

3. ஒழுக்கம் :- ஒரு நிறுவனத்தினுள்ளே மதிப்பு  செலுத்துதல் மற்றும் கீழ் படிதல் ஆகியன அவசியமாகின்றன சிறந்த ஒழுக்கங்கள் ஒழுக்கக்கேடான முறைகளின் போது விசேட தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிலையை முகாமையாளருக்கு ஏற்படுத்துகின்றது.

4. கட்டளையிடலின் ஒரினத் தன்மை :- நிறுவன நடவடிக்கைகள் ஒரு குறித்த இலக்கை நோக்கி செயற்படுவனவாகவும் ஒரு குறித்த திட்டத்தின் அடிப்படையில் செயற்படுவனவாகவும் காணப்பட வேண்டும். இக் கட்டளை  ஒருவரிடம் இருந்து பிறப்பிக்கப்படல் வேண்டும்.

5. இயக்குதலின் ஒரினத் தன்மை :- நிறுவன நடவடிக்கைகள் ஒரு குறித்த இலக்கை நோக்கி செயற்படுவனவாகவும் குறித்த திட்டத்தை நோக்கி செயற்படுவனவாகவும் காணப்படல் வேண்டும்.

6. பொதுவான நோக்கிற்கு இரண்டாம் பட்சமான தனி நபர் நோக்கம். :- ஒரு நிறுவனத்தின் நோக்கத்தை விட தனி ஊழியருடைய குழுக்கழுடைய நோக்கங்கள் இரண்டாம் பட்சமானவையாககக் காணப்படுகின்றன. ஊழியர்களிடைய ஏற்படும் பிரச்சினைகளை தவிர்பதற்கு இதனை பேணுதல் மிகவும் அவசியமானதாகும்.

7. ஊழியர்களுக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவு :-  ஊழியர்களால் வழங்கப்பட்ட சேவைக்கான கட்டணமாகிய சம்பளங்கள் நியாயமான வையாகவும் தொழில் தருநர் மற்றும் தொழில் கொள்வோர் ஆகிய இருவருக்கும் திருப்தி அளிப்பனவாகவும் இருத்தல் வேண்டும். 

8. ஒழுங்குபடுத்தல் :- ஒழுங்குபடுத்தல் பிரதான நோக்கமானது நபர்களுடைய முயற்சியினை சிறப்பாக பயன்படுத்துதலாகும் ஒவ்வொரு நிறுவனத்தினுடைய மாறுகின்ற இயல்புகளுக்கு ஏற்ப ஓழுங்குபடுத்தலின் அளவானது வேறுபடலாம்.

9. ஆதிகாரச் சங்கிலி :- அதிகாரச் சங்கிலியானது நிறுவனத்தில் அதிகாரம் கூடிய மட்டத்திலிருந்து குறைந்த மட்டம் வரை பரந்து செல்கின்றது.

10. கட்டளை :- மூலப் பொருட்கள் மற்றும் நபர்களைப் பெற்றுக் கொள்வதற்கு கட்டளையிடுதல் அவசியமானதாகும். நிறுவனத்தினுடைய ஒவ்வொரு தொழில் மற்றும் நடவடிக்கைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் திறமையான ஊழியர்கள் மிகவும் அவசியமாகும்.

11. சமத்துவம் :- நிறுவனத்தில் சமத்துவம் என்பது அன்பு மற்றும் நியாயத்துவம் ஆகியவற்றின் சேர்க்கையாகும். ஊழியர்களுடன் தொடர்புபடும் போது சமத்துவம் மற்றும் நியாயத்துவம் ஆகியவற்றினை உறுதிப்படுத்தல் அவசியமானதாகும்.

12. தனி நபர் தொழில் பாதுகாப்பு  :- உச்ச உற்பத்தி மட்டத்தினை தனி நபர்களிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்காக ஒரு ஸ்திரமான ஊழியப் படையை  பேணுதல் அவசியமாகும்.

13. புத்தாக்கம் :- ஒரு திட்டத்தினை உருவாக்கி அதனை வெற்றியடையும் வகையில் வழிநடாத்தி உறுதிப்படுத்திய செல்லுதல் ஒரு சிறப்பான ஊக்கப்படுத்தல் ஆகும். நிறுவனத்தின் படி முறையிலேயே அனைத்துப் பகுதிகளிலும் இந்த சக்தி மற்றும் புத்தாக்கம் ஆகியன அவசியமாகின்றன.

14. குழு தொடர்பான எண்ணம் :- ஒரு வணிகத்திற்கு குழு வேலை மிகவும் அடிப்படையான காரணியாகும் குழுவாக வேலை செய்தல் மற்றும் நேருக்கு நேரான தொடர்பாடல் மற்றும் குழு வேலை ஊக்குவிக்கப்படுகின்றது. 

தொழிற் பிரிப்பு :- நிறுவனத்தின் செயற்பாடுகள் பல்வேறு கட்டங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு  பிரிவிற்கும் பொறுப்பாக தனித்தனியாக ஒவ்வொரு வரை நியமிக்கும் போது உற்பத்தியின் தரத்தை மேன்படுத்தும் என்பதை ஹென்றி பயோல் கூறியுள்ளார்.

1. நிறுவனத்தின் செயற்பாடுகளை மேற்கொள்ள தனித்தனியான தொகுதி , பகுதிகளும் தனித் தனியான திட்டங்களும் நடைமுறைகளிலும் இருக்கும்.என்றாலும் அவை ஒவ்வொன்றும் நிறுவனத்தின்பால் செயற்படுத்த வேண்டும் 

2. நன்நடத்தை :- சட்;டங்களுக்கும் விதிகளுக்கும் கட்டுப்பட்டு நடத்தல் வேண்டும் 

3. பொதுநலம் பேணல் :- ஊழியர் எவரும் தனிப்பட்ட நன்மையை கருத்தில் கொண்டு இருக்கக் கூடாது மேலும் பணியாளர்கள் ,நேர்மை , நம்பிக்கை , பக்கச்சார்பற்றவராக இருத்தல் வேண்டும். 

4. மையப்படுத்தல் :- எல்லா தீர்மானங்களும் முகாமையாளரினால் எடுக்கப்பட்டு உதவியாளர்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும்.

5. சன்மானம் வழங்கல் :-  ஊழியர்களுக்கு வழங்கப்படும் சன்மானம் நியாயமானதாகவும் , சமமானதாகவும் இருத்தல் வேண்டும்.


No comments

Powered by Blogger.