பாடசாலை சுகாதார வேலைத்திட்டம் தொடர்பில் சமூக பங்களிப்பு


 பாடசாலை சுகாதார வேலைத்திட்டம் தொடர்பில் சமூக பங்களிப்பு


இந்த தொடர்பு பாடசாலைக்கும் சமூகத்திற்கும் அன்னியோனியமாக பயணித்தல் வேண்டும். சமுகம் பாடசாலையின் அபிவிருத்தி திட்டத்தின் நோக்கத்தை நிறை வேற்றிக்கொள்ள உதவ வேண்டிய அதே வேளை பாடசாலை பிரதேசத்தில் அபிவிருத்தி வேலைகளுக்கும் தலைமைத்துவத்தை பெற்றுக்கொடுக்கலாம். இதன் மூலம் சுகாதார முன்னேற்றம் பற்றிய அறிவையும் மேம்படுத்த முடியும். எனவே பாடசாலை சுகாதார வேலைத்திட்டம் தொடர்பில் சமூக பங்களிப்பை மேற்கொள்ள பின்வரும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். 


மேற்படி வேலைத்திட்டத்தின் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவுக்கு சமர்பித்தல்


பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவின் அங்கீகாரத்தைப் பெற்ற பின் பாடசாலை முகாமைத்துவக் குழுவிற்கு சமர்பித்து அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளல்.



பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவினதும் பாடசாலை முகாமைத்துவக் குழுவினதும் உதவியோடு கமுஃசதுஃ அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் சுகாதார மேம்பாட்டு பண்புச்தரசுட்டிக்கு பொறுப்பாக உள்ள ஆசிரியருக்கு சமர்பித்தல்

 

பாடசாலை பழைய மாணவர் சங்கத்திற்கு பேற்படி செயற்றிட்டத்தை சமர்பித்து ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கல்.


பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவினதும் பாடசாலை முகாமைத்துவக் குழுவினதும் உதவியோடும் சுகாதார மேம்பாட்டு பண்புச்தரசுட்டிக்கு பொறுப்பாக உள்ள ஆசிரியரின் உதவியோடும் அப்பாடசாலையில் கற்கும் மாணவர்களின் பெற்றோர்களை குறிப்பிட்ட நாள் ஒன்றில் ஒன்று சேர்த்து பின்வரும் செயற் திட்டங்களை  செய்வதற்கு  வழிவகுத்தல்.


அத்திட்டங்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1. பாடசாலை சூழலை முறையாக சுத்தப்படுத்துவது பெற்றோரின் பாரிய பொறுப்பு என்பதை தெளிவுபடுத்தல். 

பாடசாலைச்சூழலில் ஒவ்வொரு நாட்களும் குப்பைகள் சேர்வதுடன் அவை தூங்கியும் காணப்படுகின்றது. இதனை இல்லாமல் செய்ய வேண்டியது பாடசாலையின் கட்டாயமாகும். இதனை இவ்வாறான வழிமுறைகளின் மூலம் நிபர்த்தி செய்ய முடியும்.


மாணவர்களின் பெற்றோர்களினால் சிரமதானப் பணியினை மேற்கொள்ளல்

பின்னர் பாடசாலை சுகாதாரக் குழுவினைக்கொண்டு வாரந்தோறும் பாடசாலையை மாணவர்களை கொண்டு சுத்தப்படுத்தல் இதன் மூலம் பாடசாலை சூழலை சுத்தமாக வைத்திருக்க முடியம். 


2. சூழலில் பொலித்தீன் பாவனையை தடை செய்ய வழிவகுத்தல்.


பாடசாலையில் தற்போது பொலித்தீன் பாவனை என்பது இன்றியமையாத தாக மாறிவிட்டன. அந்த அடிப்பவையில் பாடசாலையில் பொலித்தீன் பாவனை இல்லாமல் செய்வதனால் பாடசாலை மாசுபடுதலை தவிர்த்துக் கொள்ளலாம். அந்த அடிப்படையில் மாணவர்களின் பெற்றோர்களிடம் உங்கள் குழந்தைகளுக்கான உணவுப்பொருட்களை உணவுப்பெட்டிகளில் வழங்குமாறு வழியுறுத்தல். மேலும் பாடசாலை சிற்றூண்டிச்சாலையில் பொலித்தீன் பாவனையை தடைசெய்யுமாறு ஆலோசனை வழங்கி அவற்றை சுகாதார குழு மூலம் மேற்பார்வை செய்தல் இவ்வாறான திட்டம்  மூலம்  பொலித்தீன் பாவனையை தடை செய்ய முடியும்.


3. பாடசாலைச் சூழலில் போதைப்பொருள் பாவனையை முற்றாக விற்பனை செய்வதை  தடை செய்ய ஆலோசனை வழங்கல்.


போதையற்ற நாட்டை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் பாடசாலைச்சூழலிலுள்ள சமூகத்தவருக்கு கருத்தரங்கு ஒன்றை நடத்துவதன் மூலம் ஓரங்க நாடகங்களை நடாத்துவதன் மூலம் போதைப்பொருளினால் ஏற்படும் பாதிப்புக்களை எடுத்துரைப்பதன் மூலமும் போதைப்பொருள் பாவனையை முற்றாக தடை செய்யமுடியும்


4. தொற்றுநோய் தொடர்பாக பாடசாலை சமூகத்திற்கு வழியுறுத்தல்


பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து தற்காலத்தின் தொற்றுநோய்களின் பாதிப்பு அதிகரித்து காணப்படுவதற்கான காரணம் எம்மத்தியில் சுகாதார நடைமுறையின்மையேயாகும். எனவே சுகாதார திணைக்களத்தினால் மற்றும் சுகாதார பரிசோதகர்களினால் வழங்கப்படும் ஆலோசனையை பின்பற்றி நடைமுறைப்படுத்தினால் தாமும் தமது பிள்ளைகளும் ஆரோக்கியமாக வாழமுடியும் என்பதனை தெளிவுபடுத்தல் 


5. சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கான வழிமுறைகளை சமூகத்துக்கு விழிப்பூட்டுதல்.


சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை அழைத்து சிறுவர் துஷ்பிரயோகங் களினால் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி சமூகத்தினருக்கு விழிப்பூட்டும் கருத்தரங்குகளை மேற்கொள்ளல்

 

6. பற்சுகாதார தொடர்பான ஆலோசனைகளை வழங்கல்.


பொது வைத்தியசாலையில் பணியாற்றும் பல்வைத்தியர் மற்றும் சுகாதார ஊழியர்களை அழைத்து அவர்களைக்கொண்டு பாடசாலை அயல் சமூகத்தி னருக்கு பற்சிகிச்சை வேலைத்திட்டங்களை மேங்கொள்ளல்


7. சுகாதார நிறுவனங்களின் உதவிகளைப்பெற்று சமுகத்திற்கு உதவிகளை புரிதல். 

சுகாதார நிறுவனங்களின் ஊழியர்களைக்கொண்டு பாடசாலை மற்றும் அயற் சூழல்மக்களுக்கு டெங்கு இ கொரோனா  போன்ற நோய்கிருமிகளை அழிப் பதற்கான தொற்றுநீக்கிகளை பெற்றுக்கொடுத்தல். 


No comments

Powered by Blogger.