பிரித்தானியர் ஆட்சியில் பெருந்தோட்ட துறையின் அபிவிருத்தி

 



பிரித்தானியர் ஆட்சியில் பெருந்தோட்ட துறையின் அபிவிருத்தி

கோல்புறுக் ஆணைக்குழுவின் சிபாரிசுகள் 1833ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த ஆரம்பித்ததன் பின்னர் இந்நாட்டில் பாரிய பொருளாதார மாற்றம் ஒன்றிற்கான அடித்தளமிடப்பட்டது. இலங்கை வந்த  முதலீட்டாளர்கள் ஏற்றுமதி மூலம் அதிக இலாபம் ஈட்டக்கூடிய வர்த்தக விவசாய பயிர்ச்செய்கையிலே முதலீடுகளை மேற்கொண்டனர். எனவே 19ம் நூற்றாண்டில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை துரித வளர்ச்சி கண்டது.


கோப்பிப் பயிர்ச்செய்கை

ஆங்கிலேயர் கண்டியை கைப்பற்றும்போது சில இடங்களில் வீட்டுத்தோட்ட பயிராக கோப்பி காணப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அது பெருந்தோட்ட பயிராக வளர்ச்சி அடைந்தது. 1837 – 1847 காலப்பகுதியில் மலையகப் பிரதேசத்தில் கோப்பி பயிர்ச்செய்கை வேகமாக விருத்தி அடைந்தது. இக்காலப்பகுதியில் கோப்பி மூலம் அதிக இலாபம் கிடைக்கப்பெற்றது. எனவே தும்பறை, கம்பளை, பேராதனை, மாத்தளை முதலிய மத்திய மாகாண பிரதேசங்களிலும் பதுளை மாவட்டங்களிலும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

1834 ஆம் ஆண்டு ஏற்றுமதிசெய்யப்பட்ட கோப்பியின் அளவை விட 5 மடங்கு அதிகமாக 1844 ஆம் ஆண்டு ஏற்றுமதி செய்யப்பட்டது. 1844 ஆம் ஆண்டின் பின்னர் பிரித்தானியா பின்பற்றிய சுதந்திர வர்த்தக கொள்கை காரணமாக பிரித்தானிய சந்தையில் இலங்கை கோப்பிக்கு கடும் போட்டி ஏற்பட்டது. 1869 ஆம் ஆண்டில் கோப்பிப் பயிருக்கு ஏற்பட்ட ர்நஅடையை ஏநளவயவசiஒ எனும் இலை வெளிறல் நோய் வேகமாக பரவியமையினால் கோப்பிப் பயிர்ச்செய்கை முற்றாக வீழ்ச்சி யடைந்தது.


சிலகானோ

கோப்பியின் வீழ்ச்சியை தொடர்ந்து சில முயற்சியாளர்கள் சிலகானோ பயிர்ச் செய்கையில் ஈடுபட்டனர். ஆயினும் சிலகானோ அதியுயர் பிரதேசங்களில் மட்டுமே வெற்றியளித்தது. அத்துடன் அது ‘ குவினைன்’ எனும் மருந்துக்கான மூலிகைப் பயிராக விளங்கியது. ஆகவே இதற்கான கேள்வி குறையத் தொடங்கியது.

கொக்கொ

கோப்பிப் பயிர்ச்செய்கையை தொடர்ந்து கொக்கொ பயிர்ச்செய்கைக்கு அனுசரனை கிடைத்தது. மாத்தளை மாவட்டத்தில் மாத்திரம் கொக்கொ பயிர்ச்செய்கை வெற்றியளித்தமை யினால் கொக்கொ பயிருக்கு நிழல் தேவைப்பட்ட காரணத்தாலும் கொக்கொ பயிர்ச்செய்கை வெற்றியளிக்கவில்லை.


தேயிலை  

கோப்பியின் வீழ்ச்சி காரணமாக அப்பயிர்ச் செய்கையாளர்கள் தேயிலையைப் பயிரிட்டமையினால் அது விரைவாக பரவியது. இலங்கையில் உலர் வலயம் தவிர்ந்த 6000 அடி வரை உயரமான எல்லாப் பகுதிகளிலும் தேயிலையைப் பயிரிட முடிந்தமையினால் மத்திய, ஊவா, சபரகமுவ மாகாணங்களில் தேயிலைப் பயிர்ச்செய்கை பரவியது. பின்னர் தென் மாகாணங்களிலும் மேல் மாகாணங்களிலும் தேயிலை பயிரிடப்பட்டது. 1930ம் ஆண்டாகும் போது அளவினதும் பாரிய அளவிதுமான 1200 தேயிலைத் தோட்டங்கள் இலங்கையில் காணப்பட்டதாக அறிக்கைகள் கூறப்படுகின்றன. தேயிலைப் பயிர்ச்செய்கையின் வளர்ச்சி காரணமாக அது இலங்கையின் பிரதான ஏற்றுமதி பயிராக மாறியது.


தென்னை

தெங்கானது பண்டைக்காலம் முதல் இலங்கையில் பயிரிடப்பட்டு வந்த வீட்டுத்தோட்டப் பயிராகும். 1850 களில் கோப்பியின் விலை வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து தென்னை மீது கவனம் செலுத்தப்பட்டது. ஐரோப்பியரை விட இலங்கையர் தென்னை பயிரிடுவதில் அதிக கவனம் செலுத்தினர். 1880ம் ஆண்டளவில் தென்னங்தோட்ட உரிமையாளர்களில் 65 சதவீதமானோர் இலங்கையர்களாக இருந்தனர். மலைநாட்டு பிரதேசங்களை விடப் பரந்த சமவெளி பிரதேசங்களில் தென்னை பயிரிடப்பட்டது. குருணாகல, சிலாபம், கம்பஹா முதலிய பிரதேசங்களில் தெங்கு பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. தெங்கு பயிர்ச்செய்கை பரவலடைந்தபோது லுணுவில என்னும் இடத்தில் தென்னை ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டது.


No comments

Powered by Blogger.